யாழிலிருந்து கிளிநொச்சி வரை சமூக விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி பயணம்

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் யாழ் போதனா
வைத்தியசாலைப் பணிப்பாளாரும்,கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான த. சத்தியமூர்த்தியின் தலைமையில்  சமூக விழிப்புணர்வுக்கான துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் போதனா
வைத்தியசாலையின் முன்றலில் ஆரம்பித்து கிளிநொச்சி வரை இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக் கிழமை 10.10.2020 மாலை  வேலை நிறைவு பெற்றதும் 4.30 மணிக்கு  ஆரம்பித்த  சமூக
விழிப்புணர்வுக்கான துவிச்சக்கர வண்டி பயணம் இரவு
8  மணியளவில் கிளிநொச்சியில் நிறைவுபெற்றது.

கொரோனா பரவுவதனை தடுத்தல், போதைப்பொருள் பாவனையை தடுத்தல், வீதி
விபத்துக்களை தடுத்தல், சூழல் மாசுபடுவதனை தடுத்தல், உடல் ஆரோக்கியத்தை
பேணல் போன்ற சமூக  வழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்  நோக்கில்  மேற்படி
துவிச் சக்கர வணடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த துவிச்சக்கர வண்டி பயணம் இயக்கச்சியை
வந்தடைந்த போது கிளிநொச்சி நகர றோட்டரிக் கழக உறுப்பினர்கள், மற்றும்
சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இப் பயணத்தில் இணைந்துகொண்டனர்.

மேலும் வைத்திய நிருபுணர்களான பிரேமகிருஸ்ணா,  தவராசா, எழில்வேல்,சிரேஸ்ட விரிவுரையாளர் முருகானந்தன், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள்மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap