பல்கலைகழக கல்விக்கு உதவி வழங்கும் மற்றுமொருதொகுதி மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்குவதற்கான மற்றுமொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்றது.

பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பொருளாதார நெருக்கடி காரணமாக பட்டப்படிப்பை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்ற மாணவர்களுக்கு மாதாந்த உதவுத் தொகை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் கடந்த 2013 தொடக்கம் 2020 ஓகஸ்ட் வரை 797 மாணவர்கள் தங்களின்பட்டப்படிப்புக்கான உதவி தொகையை பெற்று வருகின்றனர்.மேலும் 79 மாணவர்கள் உதவிக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் விண்ணப்பித்த மாணவர்களில் இன்று (23) 17 மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. நேர்முகத் தேர்வினை கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் ச.ஸ்ரீகௌரிபாலா, பொருளாளர் க.குகதாசன், உபதலைவர் அ.பங்கையற்செல்வன், வெ.சகாயமேரி, ய.கார்தியாயினி ஆகியோர் நடாத்தியிருந்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap