கிளிநொச்சி நிலத்தில் ஒரு மில்லியன் பயன்தரு விதைகள் கற்பகா திட்டம் ஆரம்பம்

மிக வேகமாக பாதிக்கப்படைந்து செல்லும் இயற்கையை பாதுகாக்கும் நோக்குடன்கிளிநொச்சி நிலத்தில் ஒரு மில்லியன்  பயன்தரு விதைகள் கற்பகா திட்டத்தின்ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணிக்குஇடம்பெற்றது.

முதற்கட்டமாக 10 ஆயிரம்   பனை விதைகள் நடும் நிகழ்வு  கிளிநொச்சி மாவட்டஅரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் முதன்மைவிருந்தினராககலந்துகொண்டு  ஆரம்பித்து வைத்துள்ளார்.

இரணைமடு வான்பகுதியின் பாதுகாப்பு மண் அணையின் ஆறு கிலோ மீற்றர்
தொலைவிற்கு இரு புறமாக சுமார் 12 கிலோ மீற்றருக்கு  பனை விதைகள்
நாட்டப்பட்டுள்ளன.

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட
மக்கள் அமைப்பு, கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் சர்வதேச ஒன்றியம், கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் அனுசரணையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

கல்வி வளர்ச்சி அறகட்டளையின் உப தலைவர் அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கிளிநொச்சி சமூகஅபிவிருத்தி பேரவையின் இணைப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, பனைஅபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர், பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரின்இணைப்புச் செயலாளர், இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தைச் சேர்ந்தவிவசாயிகள், இளைஞர்கள் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினனர் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap