புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இடர் நீக்கும் பணியில் KEDT

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாளாந்தம் உழைத்து வாழ்ந்து வந்த குடும்பங்கள் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர்.

இந்த நிலையில் எம் மக்களின் நெருக்கடியை முடிந்தளவுக்கு தவிர்க்கும் வகையில் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின் கோரிக்கையினை ஏற்று புலம்பெயர் உறவுகள் நிதியுதவியை வழங்கி வருகின்றார்கள். அவர்களின் நிதியின் மூலம் பெறப்பட்ட உலருணவுப் பொருட்கள் பொதி செய்ய்ப்பட்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் Path to the Future – UK அமைப்பின் நிதியுதவியில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தால் ஒவ்வொன்றும் 2000 ரூபா பெறுமதியான 100 உலருணவுப் பொதிகள் நேற்றையதினம் 08-04-2020 கிளிநொச்சி செல்வாநகர், விநாயகபுரம், கோணாவில் ஆகிய கிராமங்களில் அந்தந்த கிராம அலுவலர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிப்பட்டுள்ளன.

You may also like...

Share via
Copy link
Powered by Social Snap