பளையில் 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 200 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் நேற்றையதினம் 10-04-2020 வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு – லண்டன் நிதி அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகர றோட்டரிக் கழகத்தினால் பளை பிரதேசத்தில் முள்ளியடி, புலோப்பளை, அல்லிப்பளை, பளைநகர் ஆகிய கிராமங்களில் பளை பிரதேச செயலாளர் திருமதி ப. ஜெயராணி அவர்களின் அனுமதியுடன் கிராம அலுவலர்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்த 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் வகையில் அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தினக் கூலி குடும்பங்கள் தங்களின் நாளாந்த உணவுத் தேவையினை பூர்த்தி செய்துகொள்வதில் நெருக்கடிகளை சந்திக்க தொடங்கினர். எனவே இவர்களின் நெருக்கடிகளை முடிந்தளவு நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர். த.சத்தியமூர்த்தி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு – லண்டன் அமைப்பினால் வழங்கப்பட்ட 200 குடும்பங்களுக்கான உதவிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி உதவிகளை நேற்றைய தினம் (10) கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் கிளிநொச்சி நகர றோட்டரிக் கழக உறுப்பினர்கள் மக்களிடம் கையளித்தனர்.

You may also like...

Share via
Copy link
Powered by Social Snap