விசுவமடு கல்வி நிலையம்

விசுவமடு விஞ்ஞானக் கல்வி நிலையமானது கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தரம் ஆறு முதல் க.பொ.த. உயர்தரம் கணிதம்,விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவுகளுக்கான வகுப்புகள் நடைபெறுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக சனத்தொகையை கொண்ட கிராம அலுவலர் பிரிவான புண்னணநீராவி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்கட்டு, விஸ்வமடு பிரதேச மாணவர்களும் இக் கல்வி நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

2005-06-27 அன்று ஆரம்பிக்கப்பட்ட இக் கல்வி நிலையத்தில் தற்போது 400 வரையான மாணவர்கள் கல்வி கற்பதோடு, 30 ஆசிரியர்களும் கற்பித்தலில் ஈடுப்படுகின்றனர். மேலதிக கல்வியாக இலவச கணிணிக் கல்வியும் வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு கணிணிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

விசுவமடு கல்வி நிலையத்திற்கு அனைத்துலக மருத்துவ சுகாதார நலச் சங்கம் (International Medical Health Organization) தொடர்ச்சியாக அணுசரனை வழங்கி வருகின்றனர்.

Copy link
Powered by Social Snap