புதுமுறிப்பு விஞ்ஞானக் கல்வி நிலையம்

புதுமுறிப்பு விஞ்ஞானக் கல்வி நிலையம் கடந்த 10-04-2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் 08 கிலோ மீற்றர் தொலைவில் இந் நிலையம் அமைந்துள்ளது.

புதுமுறிப்பு, செல்வாநகர் கிராமங்களை இலக்காக கொண்டு இக் கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த பிரதேசத்தில் கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம், கிளிநொச்சி செல்வாநகர் பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் மாலை நேரக் கல்வியே இவ் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

வசதிப்படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பல வழிகளில் நகரங்களுக்கு சென்று கல்வியை தொடர்கின்றனர். ஆனால் பொருளாதாரத்தில் நிலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவ்வாறில்லை. இதனால் இக் கல்வி நிலையம் அவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

புதுமுறிப்பு விஞ்ஞானக் கல்வி நிலையத்தை கல்வி வளர்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து ஆரம்பிப்பதற்கு வித்துவான் வேந்தனார் ஞாபகார்த்தமாக சின்னையா கலையரசி குடும்பத்தினர் (அவுஸ்ரேலியா) ஈழத் தமிழர் கழகம் (அவுஸ்ரேலிய) அனைத்துலக மருத்துவ சுகாதார நலச் சங்கத்தின் (International Medical Health Organization), எதிர்காலத்திற்கான பாதை (Fath to the future), அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( Australian Medical Aid Foundation ) ஆகியோர் பங்களிப்புச் செய்துள்ளனர்.

இக் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை அனைத்துலக மருத்துவ சுகாதார நலச் சங்கத்தின் (International Medical Health Organization), வழங்கி வருகின்றனனர்.

அத்தோடு புதுமுறிப்பு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் (UK) நிதியுதவியுடன் இலவசக் கணிணி கற்கை நிலையமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டடத்தினை ரட்ணம் பவுண்டேசன் ஊடாக யோகேஸ்வரன் குடும்பத்தினர் (UK) அமைத்து தந்துள்ளனனர். அத்தோடு கணிணி ஆசிரியர், காவலாளி போன்றோருக்கான கொடுப்பனவுகளும் ரட்ணம் பவுண்டேன் அமைப்பினரே வழங்கி வருகின்றனர்.

தற்போது வரை 160 க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர்.

Copy link
Powered by Social Snap