பற்சுகாதார செயற்திட்டங்கள்

அறிமுகம்
பற்சுகாதாரத்தின் ஊடாக பொதுச் சுகாதாரத்தை பாதுகாத்தல் எனும் அடிப்படையில் மாணவர்களின் மத்தியில் ஏற்படுகின்ற பல் வாய் சம்மந்தமான நோய்த் தாக்கங்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டு தடுப்பதன் ஊடாக அவர்களை பிற நோய்த்தாக்கங்களிலிருந்து பாதுகாத்து ஓர் ஆரோக்கியமான சிறந்த மாணவர் சமூதாயத்தை உருவாக்கும் நோக்கில் 2013 இல் இச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

திட்டத்தின் நோக்கம்
மாணவர் சமூதாயத்தை பல் தொடர்பான நோயிலிருந்து பாதுகாத்து, தடையின்றிய கல்வியை வழங்குதல்.

திட்ட செயற்பாடுகள்

 1. தரம் ஒன்று மாணவர்களுக்கு பற்தூரிகை பற்பசை வழங்குதல்
 2. தரம் ஒன்றுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு
  செயலமர்வுகளை நடாத்துதல்
 3. பாடசாலைகளில் நடமாடும் பற் சிகிச்சை சேவை
 4. பற்சிசிச்சை நிலையங்களான கிளிநொச்சி மகா வித்தியாலயம்,
  உடையார்கட்டு மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஊடாக பற்
  சிகிச்சைகள் வழங்கல்
 5. மேற்பார்வை செய்தல்

நிதி அனுசரணையாளர்கள்
கிளிநொச்சி கல்வி வலயம் -அனைத்துலக மருத்துவ சுகாதாரநலச் சங்கம் (IMHO)
முல்லைத்தீவு கல்வி வலயம் – அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் (AMAF)
திரு. மூதூர் கல்வி வலயம் – அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் (AMAF)
துனுக்காய் கல்வி வலயம் – கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கம் (CTMA)

இணை அனுசரணையாளர்கள்
* கிளிநொச்சி கல்வித் திணைக்களம்,
* முல்லைத்தீவு கல்வித் திணைக்களம்,
* துனுக்காய் கல்வித் திணைக்களம்,
* மூதூர் கல்வித் திணைக்களம்,
*கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,

*முல்லைத்தீவு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,

*திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,

திட்டப் பிரதேசங்கள்
கிளிநொச்சி
முல்லைத்தீவு
திருகோணமலை

கிளிநொச்சி
கிளிநொச்சி கல்வி வலயத்தில் கரைச்சி,கண்டாவளை,பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு கல்விக் கோட்டங்களில் 95 பாடசாலைகளில் பற்சுகாதா செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013 தொடக்கம் இன்றுவரை இச் செயற்றிட்டமமானது அனைத்துலக மருத்துவ சுகாதாரநலச் சங்கத்தின் (IMHO) நிதி அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது மெற்கொண்டு வருகிறது.

முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 58 பாடசாலைகளிலும் மற்றும் துனுக்காய் கல்வி வலயத்தில் 53 பாடசாலைகளிலும் பற்சுகாதார செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் (AMAF), கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கம் (CTMA) ஆகியவற்றின் அனுசரணையில் துனுக்காய் வலயத்தில் 2014 ஆம் ஆண்டு தொடக்கமும், முல்லைத்தீவு வலயத்தில் 2016 ஆம் ஆண்டு தொடக்கமும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது இச் செயற்றிட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

திருகோணமலை
திருகோணமலை மூதூர் கல்வி வலயத்தில் மூதூர் கிழக்கு பழங்குடி மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின்(AMAF) அனுசரணையில் கடந்த 2018 ஆண்டு தொடக்கம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது பற்சுகாதார செயற்றிட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

திட்டத்தின் பயனாளிகள்
பற்சுகாதார செயற்றிட்டத்தின் பயனாளிகளாக பாடசாலைகளில் ஒவ்வொரு வருடமும் தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இதன் பயனாளிகளாக இருப்பர்.

திட்டத்தின் நன்மை
கடந்த ஏழு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பற்சுகாதார செயற்றிட்டத்தின் ஊடாக மாணவர்களிடைய பல் தொடர்பான நோய்கள் குறைந்துள்ளமையினை ஆய்வின் ஊடாகவும், பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் கருத்துக்களின் ஊடாகவும் அறிய முடிந்துள்ளது. எமது செயற்றிட்டம் ஆரம்பிக்க முன்னர் இருந்த மாணவர்களின் பலர் அடிக்கடி பல் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆவர்கள் அடிக்கடி பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது வைத்தியசாலை செல்வதும், வீடுகளில் சில நாட்கள் நின்றுவிடுவதனையும் ஆசிரியர்கள் ஊடாக அறிந்துள்ளோம். அல்லது பாடசாலைகளில் கற்றல் நேரங்களில் பல் வலி காரணமாக கற்றலில் ஈடுப்படாது ஒதுங்கியிருப்பது அல்லது பாடசாலையிலிருந்து இடையில் செல்வது போன்ற நிலைமைகள் காணப்பட்டன. ஆனால் இச் செயற்றிட்டத்தின் பின்னர் இந்த நிலைமைகள் மிக மிக குறைந்தளவாகவே இடம்பெறுகிறது. இன்னும் சில கால்த்தில் இது முற்றாக இல்லாது போய்விடும் என்ற அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Copy link
Powered by Social Snap